பொருள்: பக்திபூண்ட மதுரபாரதியைக் கருவியாகக் கொண்டு அருளப்பட்ட இந்தப் பாதாரவிந்த பதிகத்தைத் தினந்தோறும் ஓதினோருக்கு, ஸ்ரீ சத்திய சாயி பகவான் நீண்ட ஆயுள், (குற்றமற்ற வழிகளில் வந்த) சிறந்த செல்வம், இவற்றுக்கும் மேலே ஒப்பில்லாத மோட்சத்தையும் அருளுவான். இது சத்தியம். அன்பர் அஞ்சவேண்டுவதில்லை! குறிப்பு: பதிகம் என்பது 10 பாடல்களால் ஆனது. பத்தாவது பாடல் பலன்சொல்லும் பதிகமாக (பலச்ருதி) அமையவேண்டுமென்பது. மரபு. இத்துடன் ‘பாதாரவிந்த பதிகம்’ நிறைவு பெறுகிறது.
வேதங்கள் கூறு வோனும், விண்ணோர்கள் ஏத்து வோனும் நாதங்கள் கூறு வோனும், நல்லோர்கள் கூறுவோனும், ஏதங்கள் மாற்று வோனும், எம்மோனும் நீயே பாபா! பாதார விந்தம் பணிவோம், பர்த்தீச ஞான குருவே!
பொருள்: மிக உயர்ந்தனவாகிய நான்மறைகள் நின்னையே குறித்து நிற்கின்றன; வானவர்கள் உன்னப் போற்றுகின்றனர்; இசைப்பாடல்கள் உன் புகழையே இசைக்கின்றன; நல்லோர் உன் புகழைப் பேசுவதில் மகிழ்கின்றனர்; எங்கள் குற்றங்களைக் களைந்து எம்மை நீ மாற்றியமைத்துவிடுகிறாய்; உன்னையே நம்பும் எமக்கெல்லாம் ஒரே துணை நீதான் பாபா! பர்த்தியில் அவதரித்த ஞானகுருவாகிய உன் பாதத் தாமரைகளை நாங்கள் பணிகிறோம்.
பொருள்: சாதாரண மானுடவுடலைத் தாங்கி வந்து, எங்களைப் போலவே ஆடையணிந்து, எங்களோடு உரையாடி, (மேலோட்டமாகப் பார்த்தால்) எம்போலவே வாழ்கிறாய்! புண்ணியம் செய்தோர் (புவிக்கு இறங்கிவந்த மெய்ப்பொருளே நீ என்கிற) நின் மெய்த்தன்மையை அறிவர். அதனை அறியுமளவுக்குப் பொறுமை இல்லாதவர்கள் இவ்வுண்மையை அறியவும் கூடுமோ! இனிமையே வடிவெடுத்த நின் பாதங்களைப் பணிகிறோம், பர்த்தியில் வந்து பிறந்த எமது ஞானகுருவே!