சாயி கீதை
பகவான் ஸ்ரீ சத்ய சாயி அருட்சன்னிதானம்
Thursday, August 8, 2019
சாயீ தாள் பணிவேன்!
நானே எனதே என்றெண்ணி
நாதா நின்னை மறந்திட்டே
ஊனே வளர்த்தேன் உலகியலில்
ஊறிக் கிடந்தேன் எனைமீட்டாய்
வானே மண்ணே வையகமே
வகையாய்ப் படைத்த மாதவனே
தானே தன்னை அறியும்வகை
தந்தாய் சாயீ தாள்பணிவேன்!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)