Monday, March 4, 2019

புகலிடம் எனக்கேதையா!



பல்லவி

புகலிடம் எனக்கேதையா - நின்னை விட்டால்
புட்டபர்த்தீசா த்ரிபுவனேசா                    (புகலிடம்..)

அனுபல்லவி

அகலிகை சாபம் அகற்றிய பாதத்
துகளென் சிரந்தனைத் தீண்டிடுமோ ஐயா!  (புகலிடம்)

சரணங்கள்

அன்றொரு வேடன் மராமரம் என்றான்
மற்றொரு வேடன் கண் பிடுங்கி நட்டான்
தின்று பார்த்த பழந் தனையொரு கிழவி தந்தாள்
என்றன் பக்தி பாபா இவற்றினும் குறைவோ?  (புகலிடம்)

பிரம்படி என்னால் விழுந்ததுண்டோ உனக்கு
பரம்பரைச் சொத்தில் பங்குதனை வாங்கித்
தரும்படித் தூது நடக்க வைத்ததுண்டோ
தாள் பணிகின்றேன் தாய் தந்தை போல்வாய்  (புகலிடம்)

எத்தனை யுகங்கள், எத்தனை பிறவி!
அத்தனையிலும் என் உடன் நடந்திட்டாய்!
பித்தனிம் மதுரன் பிதற்றலைக் கேட்டு
முத்தி தராமல் போய்விடுவாயோ       (புகலிடம்)

2 comments:

  1. Sairam, மிகமிக அருமை.. சிவனுமாய் naaraayananumai ஒன்றென கலந்த சாய் எனும் தாயை மனம் உருகி பாட்டு அமைத்து, அறியா கதைகளை கூறி தெரிந்த கதைகளை நினைவு கூர்ந்து பக்தி நெறி ஊட்டி வளர்க்கும் உங்கள் முயற்சி தொடர எங்கள் பிரார்த்தனைகள்

    ReplyDelete
    Replies
    1. ஓம் ஸ்ரீ சாயிராம். நன்றி.

      Delete